புதுவை பல்கலைக்கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, அக். 16:   புதுவை பல்கலைக்கழக நிலம் இழந்தோர் நலச்சங்க செயற்குழு கூட்டம் சின்ன காலாப்பட்டு நாகவள்ளி அம்மன் ஆலய வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர்கள் முத்துகிருஷ்ணன், சாந்தமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் பெருமாள், பொருளாளர் ஜெயபால், இணை செயலாளர் பாலசுப்ரமணியன், சங்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜானகிராமன், கிருஷ்ணன், ெஜயராமன், மணிகண்டன், அருளரசன், கஜேந்திரன், ருத்ரமூர்த்தி, சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசியதாவது: புதுவை பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த 3 கிராம மக்களுக்கு வீட்டுக்கு ஒருவர் வீதம் வேலை கொடுக்க வேண்டும் என புதுவை அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.60 சதவீதம் குடும்பத்தினருக்கு வேலை கொடுத்து ரிடையர்மெண்ட் ஆகிவிட்டனர். 40 சதவீத குடும்பத்தினர் வேலை கேட்டு சங்கமும், நிலம் கொடுத்த மக்களும் ஒன்றுசேர்ந்து இதுநாள் வரை நிர்வாகத்திடம் பேசிவருகிறோம். ஆனால் பல காரணங்களை கூறி நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து 2வது நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.     

Related Stories: