அரசு ஊழியர் சம்மேளனம் தர்ணா

புதுச்சேரி, அக். 16:   புதுச்சேரியில் அரசு ஊழியர் சம்மேளனத்தினர் தலைமை தபால் நிலையம் முன், தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சம்மேளன தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்குவது ேபால் புதுவை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை மத்திய அரசே வழங்க வேண்டும். புதுவை அரசு தனி கணக்கிற்கு முன்பு மத்திய அரசிடம் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு குறைபாடுகளை களைந்து அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது.

Advertising
Advertising

Related Stories: