சூதாடிய 5 பேர் கைது

உளுந்தூர்பேட்டை,  அக். 16: உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும்  போலீசார் காவல்

நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் எதிரில் பணம் வைத்து சூதாட்டத்தில்  ஈடுபட்ட மாதவன்(30), ரமேஷ்(44), கோபி(38), செந்தில்(40), ஞானமணி(39)  உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 51  புள்ளித்தாள்கள் மற்றும் 300 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: