×

சேகோ ஆலைகளில் சோதனை 8.5 டன் கலப்பட ஜவ்வரிசி பறிமுதல்

சேலம், அக். 16: சேலம் மாவட்டத்தில் உள்ள சேகோ ஆலைகளில் நடந்த சோதனையில் 8.5டன் கலப்பட ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி அயோத்தியாபட்டணம்  பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளில் கலப்பட ஜவ்வரிசி தயாரிப்பதாக  மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சேகோ ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 5 சேகோ ஆலைகள், உரிமம் பெறாமலும், 6 சேகோ ஆலைகள் விதிமுறையை மீறியும் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. 8 சேகோ ஆலைகளில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.  அந்த ஆலைகளில் கலப்படமாக தயாரிக்கப்பட்ட 8.5 டன் ஜவ்வரிசியும், 59 டன் ஸ்டார்ச் (ஈரமானது ) பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சேகோ ஆலைகளில் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. விதிமுறையை மீறி இயங்கிய 6 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உணவு மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததும் சேகோ ஆலைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், என்றனர்.

Tags : Chego ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை