×

ஆத்தூர் அருகே அம்மா பூங்காவை சீர்செய்ய கோரிக்கை

ஆத்தூர், அக்.16: ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம் கிராமத்தில் சிதிலமடைந்து கிடக்கும் அம்மா பூங்காவை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம் தென்னங்குடிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் அனைத்து விளையாட்டு கருவிகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகளுடன் சுமார் ₹1 கோடி செலவில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா கிராம ஊராட்சியின் பராமரிப்பில் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடம், சிறுவர் சிறுமியர் விளையாடும் கருவிகள் மற்றும் உடற்பயிற்சி நடை பயிற்சி மேற்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாத நிலையில் தற்போது பாழ்பட்டு காணப்படுகிறது. மேலும், மழை காலங்களில் பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு கருவிகள் உள்ள பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்த இந்த அம்மா பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் மிகவும் மோசமாக உள்ளது. மேலும், நவீன உடற்பயிற்சி கருவிகள் அனைத்தும் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது என்றனர்.


Tags : mother park ,Attur ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...