×

ஆனங்கூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பரமத்திவேலூர், அக்.16: பரமத்திவேலூர் அடுத்துள்ள ஆனங்கூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழையால் கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடைத்துறை சார்பில், பரமத்திவேலூர் அடுத்த ஆனங்கூர் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. நகப்பாளையம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் துரைசாமி  உள்ளிட்டோர் மாடு, எருது, எருமை மற்றும் கன்று குட்டிகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். தொடர்ந்து டாக்டர் செந்தில்குமார், கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை காப்பது குறித்த வழிமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags : vaccination camp ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்