×

ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்கள் தர்ணா

தர்மபுரி, அக்.16: தர்மபுரியில், ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்கள் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். அகில இயந்திய அஞ்சல் ஊழியர்கள் (ஆர்எம்எஸ்) ஓய்வூதியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்கத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் சுப்பிரமணியன் பேசினார். போராட்டத்தில், தபால்காரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தாமதம் இல்லாமல் மறுநிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவை தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரு இன்கிரிமென்ட் வழங்கி, ஓய்வுகால பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Tags : Postal Staff ,Darna ,
× RELATED நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி...