×

100 யூனிட் மின்சாரம் வழங்கும் இலவச திட்டத்தில் 3.93 லட்சம் நுகர்வோர் பயனடைகிறார்கள்

தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்டத்தில் மின் நுகர்வோர்கள் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தில், கடந்த ஜூலை 2016 முதல் செப்டம்பர் 2019 வரை ₹62.74 கோடி மதிப்பில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 577 மின் நுகர்வோர் பயன்பெற்றுள்ளனர்.  இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் ஏழை, எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில், ஜூலை 2016 முதல் செப்டம்பர் 2019 வரை ₹62.74 கோடி மதிப்பில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 577 மின் நுகர்வோர் பயன்பெறுகிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு கூடுதலாக மாதந்தோறும் ₹4.86 கோடி செலவினமாகிறது. மேலும் விவசாய மின் இணைப்புகளுக்கும் தொடர்ந்து, இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மின் இணைப்புகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலகம், தர்மபுரியை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : consumers ,
× RELATED மின் வாரிய அறிவிப்பு காரணமாக மின்...