×

விடுதியில் அடிப்படை வசதி கோரி போராட்டம் நடத்திய மாணவன் திடீர் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

சென்னை: மாணவர் விடுதியில் அடிப்படை வசதி கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாநில கல்லூரி மாணவன், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதன்படி, முத்தமிழ் செல்வன் (21) என்ற மாணவன் இந்த கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், இந்த மாணவர் விடுதியில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால், மாணவன் முத்துமிழ்செல்வன் தலைமையில் ேநற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், விடுதி ஊழியர்கள் ேபச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாணவன் முத்தமிழ் செல்வன் கல்லூரிக்கு சென்றபோது, விடுதியில் போராட்டம் நடத்தியதால், பெண் பேராசிரியர் ஒருவர், இவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் விடுதிக்கு வந்த முத்தமிழ்செல்வன், அறையில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  ஒரு கட்டத்தில் முத்தமிழ்செல்வனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த சக மாணவர்கள் முத்தமிழ் செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணாசதுக்கம் போலீசார் மாணவன் தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய மாணவன் திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Student Sudden Suicide ,
× RELATED விடுதியில் அடிப்படை வசதி கோரி...