போக்குவரத்து பூங்காவில் சாலை விதிகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ் அமைக்கப்பட்ட போக்குவரத்து பூங்காவில், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.   சென்னை மாநகரை விபத்துகள் இல்லாத நகரமாக மாற்றவும், அனைவரும் போக்குவரத்து விதிகளை எளிதில் தெரிந்து கொள்ளவதற்காகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,  நேப்பியர் பாலம் அருகில் ₹2 கோடி  செலவில் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டுளளது. இந்த பூங்காவில் சாலைகள் அமைக்கப்பட்டு அதில் அனைத்து விதமான போக்குவரத்து குறியீடுகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த பூங்காவை பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ்  ேஹாண்டா ேமாட்டார்ஸ் நிறுவனம் பராமரித்து வருகிறது.

 அதன்படி 5 முதல் 8 வயதுள்ள சிறுவர்களுக்கு  போக்குவரத்து விதிகளை விளையாட்டுடன் சேர்ந்து கற்றுத் தர பல்வேறு விளையாட்டு அம்சங்கள்,  9 வயது முதல் 12 வயதுள்ளவர்கள் போக்குவரத்து பூங்காவை சுற்றி வர பைக்குகள், 13 வயது முதல் 16 வயதுள்ளவர்களுக்கு போக்குவரத்து ெதாடர்பான பாடங்களை கற்றுத்தர வகுப்புகள், 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்டுவது தொடர்பான பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் ஆகியவற்றை ஹோண்டா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பூங்காவில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நியூ காமராஜ் நகர் சென்னை நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள் பூங்காவை பார்வையிட்டனர். சாலை விதிகள் மற்றும் குறியீடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது.

சைக்கிள் மூலம் அனைத்து சாலை விதிகளையும் பின்பற்றி அவர்கள் பயணம் செய்தனர். இதன்படி இதுவரை 17 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக ஹேண்டா நிறுவன பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.  இது தொடர்பாக மாநகராட்சியின் பணிகள் துறை துணை ஆணையர் கோவிந்தராவ் கூறுகையில், “குழந்தைகளுக்கு இளமை பருவத்திலியே போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தினசரி அடிப்படையில் பூங்காவிற்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories: