பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை,..புகார்களை விசாரிக்கும் குழு மாற்றியமைப்பு: ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை விசாரிக்கும் குழுவை மாற்றியமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை செய்ய அனைத்து அலுவலங்களிலும்  குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2013ம் ஆண்டு முதல், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, விலக்கு, மற்றும் குறைதீர்வு ) சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்ட்டுள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின்படி பத்து பெண்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து அலுவலகங்களிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அதன்படி சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை மாற்றியமைத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆணையர் பிரகாஷ் பிறபித்துள்ள  உத்தரவில் கூறியருப்பதாவது:பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் பணியாளர்கள் சம்பவம் தொடர்பாக 30 நாட்களுக்குள் குழுவின் தலைவரிடம் புகார் அளிக்கலாம். இந்த புகாரில் சம்மந்தபட்ட பணியாளர், இது தொடர்பான ஆதராங்களையும் இணைத்து அனுப்பலாம்.

இந்த குழுவானது புகார் அளித்தவர் மற்றும் எதிர் மனுதாரர் உள்ளிட்ட இவருக்கும்  உரிய வாய்ப்புகள் வழங்கி, இயற்கை நீதிக்கு உட்பட்டு விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 60 நாட்களுக்கு முடித்து மாநகராட்சி ஆணையரிடம் அறிக்ைக சமர்பிக்க வேண்டும். அறிக்கையின் படி புகாரில், உண்மை இருப்பது கண்டறியப்பட்டால் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகாரில் உண்மை தன்மை இல்லாமல் இருந்தால் புகார் அளித்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குழு ஓராண்டு செய்த பணிகள் தொடர்பாக ஆண்டு அறிக்கை தயார் செய்து அதை ஆணையருக்கு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொறுப்பு    பெயர்    பதவி

தலைவர்    ேஹமலதா    மாநகர மருத்துவ அலுவலர்

உறுப்பினர்    பானுமதி    கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர்

உறுப்பினர்    விஜூலா    மண்டல அலுவலர்

உறுப்பினர்    ஜெகதீசன்    கூடுதல் மாநகர நல அலுவலர்

உறுப்பினர்    சாந்தி    கூடுதல் கல்வி அலுவலர்

உறுப்பினர்    குமரேசன்    உதவி சட்ட அலுவலர்

உறுப்பினர்    ஆஷா லதா    உதவி நல அலுவலர்

Related Stories: