நாசரேத், குளத்தூரில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

நாசரேத், அக். 16: நாசரேத் சாலமோன் மெட்ரிக்கு பள்ளியில் மாணவர்களுக்கு உடையார்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு முன்னிலை வகித்தார். பேராசிரியை தேவி நட்டாரம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் பால் ஆபிரகாம், தியாகராஜன் உள்ளிட்டோர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகளை விளக்கிப் பேசினர். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் மகிலா சரவணன் நன்றி கூறினார்.

குளத்தூர்: குளத்தூர் அடுத்த தருவைகுளத்தில் காமராஜர் நற்பணி மன்றத்தினர்  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். மன்றத் தலைவர் அனிட்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜேசுராஜா, செயலாளர் செல்வசேகர், துணைச் செயலாளர் வில்சன், பொருளாளர் திரவியம், பொன்சிங், விஜயன், கிறிஸ்டியன்ராஜ், பிரசாந்த் முன்னிலை வகித்தனர். இதையொட்டி புனித மிக்கேல் துவக்கப்பள்ளி, கத்தரின் துவக்கப்பள்ளி, ஆங்கில மழலையர் துவக்கபள்ளி மாணவர்கள் மற்றும் தருவைகுளம் முக்கிய வீதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காமராஜர் நற்பணிமன்ற ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லாரண்ஸ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: