விளாத்திகுளம் அருகே புதூரில் கைகழுவும் தினம்

விளாத்திகுளம், அக்.  16: விளாத்திகுளம் அருகே புதூரில் பிரிட்ஜ் ஆப் ஹோப் சமூக சேவை  சார்பில் உலக கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது.  பிரிட்ஜ் ஆப் ஹோப்  படிப்பகத்தில் நடந்த இவ்விழாவிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் அதிசயமணி,  கைகளை சுத்தமாக கழுவுவதன் அவசியத்தை விளக்கினார். படிப்பக  ஆசிரியைகள் ஜெயந்தி, பால்செல்வி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவி திவ்யா, குழந்தைகளுக்கு கைகழுவும் படிநிலைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில் பிரிட்ஜ் ஆப் ஹோப் படிப்பகத்தில் இலவச மாலை நேர டியூசன் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: