நாகலாபுரம் அருகே சாமி அய்யா நாடார் பள்ளி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

விளாத்திகுளம், அக். 16: நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் மகாராஜபுரத்தில் 7 நாட்கள் நடந்தது. தலைமை வகித்த தலைமை ஆசிரியர் சாந்தி சிறப்புரையாற்றினார். முகாம் ஆசிரிய உறுப்பினர்கள் அன்பு,  ஜான்ஸ்டானி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் கவுதமன் வரவேற்றார். முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், கிராமப் பகுதிகளில் தூய்மைப் பணி, குடிநீர் குழாய்களை சுத்தம் செய்தல், போஷான் அபிமானம் திட்ட கருத்தரங்கு, மழை நீர் சேகரிப்பு, புகையிலை ஒழிப்பு செயல்பாடு, டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்  உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். விளாத்திகுளம் பிடிஓ தங்கவேல், நாகலாபுரம் உதவி கால்நடை மருத்துவர் நாகஜோதி, பள்ளி பிரமுகர்கள் தங்கத்துரை, திராவிடமணி, பால்பாண்டியன், காசிராஜன், சங்கரலிங்க பாண்டியன், தங்கமணி, மாரிக்கண்ணபிரான், என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் கல்லாண்டபெருமாள் உள்ளிட்ட பலர் மாணவர்களின் சேவையை பாராட்டினர். முகாம் உதவி அலுவலர் கணேசன்  நன்றி கூறினார்.

Related Stories: