×

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலையில் நேற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தேர்தல் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் அஜிஸ்குமார் தேர்தலை நடத்தினார்.

இதில் மாநில துணைத்தலைவர் தீபக்குமார், மாவட்ட தலைவர் ம.மகேந்திரன், செயலாளர் உ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மு.திருநாவுக்கரசு, அமைப்பு செயலாளர் சு.திருமாவளவன், மகளிர் பிரிவு செயலாளர் கவுரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம் கல்வி மாவட்ட தலைவர், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் இ.முருகன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்தினர். முடிவில் மாநில துணைத்தலைவர் தீபக்குமார் நன்றி கூறினார்.

Tags : Graduate Teachers' Association of Tiruvannamalai ,
× RELATED சாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய்...