×

விபத்தில் வியாபாரி காயம் 1.43 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

செய்யாறு, அக்.16: விபத்தில் படுகாயமடைந்த வியாபாரிக்கு ₹1.43 லட்சம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி, செய்யாறு பஸ் நிலையத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி தாலுகா, சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சந்திரன். இவர் பேனா வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில், கடந்த 21.7.2003ம் தேதியன்று சேத்துப்பட்டில் இருந்து போளூருக்கு அரசு பஸ்சில் சென்றார். பக்கக்குடிசை கிராமம் அருகே சென்றபோது நடந்த விபத்தில் முதுகுத்தண்டு, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதில் தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி சந்திரன், செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2004ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 2007ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் சந்திரன் கடந்த 2018ம் ஆண்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். வழக்கை சார்பு நீதிபதி சி.ஜெயஸ்ரீ விசாரித்து சந்திரனுக்கு இழப்பீடு தொகை, வட்டி மற்றும் நீதிமன்ற செலவு ஆகியவற்றை சேர்த்து ₹1 லட்சத்து 43 ஆயிரத்து 632ஐ வழங்க உத்தரவிட்டார். ஆனாலும் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்,து மேல்மருவத்தூரில் இருந்து வேலூருக்கு செல்ல நேற்று செய்யாறு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர். இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : government accident ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...