×

மாநகராட்சி அலுவலகம் முன் பரபரப்பு 11 தாலுகாக்களில் சிறப்பு குறைதீர் முகாம்

திருச்சி, அக்.15: திருச்சி மாவட்ட வருவாய்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் வருகிற 18ம் தேதி 11 தாலுகாக்களில் நடக்கிறது.திருச்சி மாவட்ட வருவாய்துறை சார்பில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்கு சிறப்பு குறைதீர் கூட்டம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர்பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை, நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி திருச்சி கிழக்கு தாலுகாவில் கே.சாத்தனூர் (வடக்கு), திருச்சி மேற்கில் பாண்டமங்கலம், திருவெறும்பூர் கீழக்குறிச்சி, ரங்கம் முடிகண்டம், மணப்பாறை கீழையூர், மருங்காபுரி தாதனூர், லால்குடி ஆலம்பாக்கம், மண்ணச்சநல்லூர் ஓமாந்தூர், முசிறி டி.புதுப்பட்டி, துறையூர் ஒக்கரை, தொட்டியம் எம்.களத்தூர் ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
18ம் தேதி நடக்கிறது

Tags : grievance camp ,talukas ,corporation office ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு