மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் மாதாந்திர உதவித்தொகை வழங்கல்

திருச்சி, அக்.15: திருச்சி மாவட்டம் ரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சி.பி.ஆதித்யாசெந்தில்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆர்டிஓ தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் சார் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. 18 மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாதாந்திர உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.1,500 பராமரிப்பு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் சார் ஆட்சியர் பரிந்துரைபடி மதுரை ஆர்.ஆர்.ரோடு கண்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.1,08,724 மதிப்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் சண்முக சுந்தரி, லஜபதி, சாந்தகுமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: