×

பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டத்தில் விவசாயிகளின் பெயர் பதிவில் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்

பாபநாசம், அக். 15: அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் பாரத பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் இதுவரை 7,000 விவசாயிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு முதல் மற்றும் 2ம் தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பெயர் பதிவு செய்யும் போது வங்கி கணக்கில் உள்ளவாறு விவசாயி பெயர் சேர்க்கப்பட்டது. தற்போது இந்த கவுரவ நிதியுதவி திட்டம் முழுமையாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டது.


எனவே 3வது தவணை நிதி விவசாயி பெற வேண்டுமானால் ஆதார் அட்டையில் உள்ளவாறு பிஎம் கிசான் கணக்கிலும், விவசாயி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதை விரைவாக செய்து முடிக்க கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை மூலமாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர விவசாயி கவுரவ நிதியுதவி திட்டத்தில் பெயர் பதிவு செய்தபோது அவர்கள் வழங்கிய விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்டு அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Special Camp ,
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...