×

படித்த, படிக்காத இளைஞர்களுக்கு சிமென்ட் ஆலைகளில் வேலை வழங்க நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் மனு

அரியலூர், அக். 15: அரியலூர் மாவட்டத்தில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு சிமென்ட் ஆலைகளில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் பெறப்பட்ட 445 கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலரும், வக்கீலுமான சுகுமார் கோரிக்கை மனு அளித்தார். அதில் அரியலூர் மாவட்டத்தை சுற்றிலும் 6 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இவைகளை அனைத்தும் அரியலூரை மையமாக கொண்டு தான் இயங்கி வருகிறது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் சேர்த்து 3,000 பொறியியல் பட்டதாரிகளும், 5 ஆயிரம் இளங்கலை, முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர்.

இவை மட்டுமின்றி படிக்காத 9,000 இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சி, சென்னை, மதுரை திருப்பூர், கோவை, கேரளா போன்ற பகுதிகளில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் உள்ளூர் மாவட்ட மக்களுக்கு வேலை வழங்காமல் உள்ளனர். எனவே 18 வார்டுகளில் வார்டுக்கு 8 பேர் வீதம் 144 பேருக்கும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் படித்து, படிக்காத இளைஞர்களுக்கு கிராமத்துக்கு 4 பேர் வீதமாவது சிமென்ட் ஆலைகள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் (பொ) ரவிச்சந்திரன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : session ,cement plants ,
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...