×

சோழன்குடிக்காடு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரியலூர், அக். 15: செந்துறை சோழன்குடிக்காடு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளை மாணவர்கள் பார்வையிட்டனர். செந்துறை அருகே சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் இயற்கை தோட்டம், பசுமை உலகம், வாகன போக்குவரத்து, நிலநடுக்கம், இயந்திரங்களின் பயன்பாடு, மண்பாண்டங்களின் பயன்பாடு, நீர் சுத்திகரிப்பு, சூரிய ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு வகையான தலைப்புகளில் மாணவர்கள் நூற்றுக்கணக்கான படைப்புகளை வைத்திருந்தனர்.

கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகளை தலைமையாசிரியர் சுகுணா பார்வையிட்டார். இதில் நிலநடுக்கத்தை அறிய உதவும் சாதனம் செய்திருந்த சிவசங்கரி முதலிடமும், நீராவி இயந்திரம் செய்திருந்த கல்யாணக்குமார் இரண்டாவது இடமும், கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செய்திருந்த அபிராமி மற்றும் இயற்கை விவசாயம் பற்றி படைப்புகள் செய்திருந்த முத்துகிருஷ்ணன், மாதவன் ஆகியோருக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. கண்காட்சியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவி மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பாலநாகம்மாள், முருகானந்தம் செய்திருந்தனர். ஆசிரியர்கள் மணிமுத்து, வீரமணி, டயானா, அகிலா, கமலக்கண்ணன், முருகானந்தம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று படைப்புகளை பார்வையிட்டனர்.

Tags : Science Exhibition ,Cholankudikkadu Government School ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி