×

அருப்புக்கோட்டை 8வது வார்டில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு பட்டாசு ஆலைகளில் அடிப்படை வசதிகள்

விருதுநகர், அக்.15: பட்டாசு ஆலைகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டரிடம் பரத்ராஜா அளித்த மனுவில், மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பட்டாசு தொழில் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் வருகிறது. அரசு பெரிய அளவில் வரிவருவாய் தரும் தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல பட்டாசு ஆலைகளில் கழிப்பறை, குழந்தைகள் காப்பகம், குடிநீர், முதலுதவி மருந்துகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளை அடக்கி கொள்வதும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இயற்கை உபாதைகளை அடக்கி கொள்ளும் நடைமுறையால் பலர் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு நடத்தி அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags : Ward ,Aruppukkottai ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி