×

இன்று மின்விநியோக குறைதீர்ப்பு முகாம்

திருவில்லிபுத்தூர், அக்.15: திருவில்லிபுத்தூரில் இன்று மின்விநியோக குறைதீர் முகாம் நடைபெறுகிறது. திருவில்லிபுத்தூர் மின்கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட அறிக்கை: திருவில்லிபுத்தூர் வட்டத்தில் வசிக்கும் மக்களின் நீண்டகால தீர்க்கப்படாத மின் விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மின் விநியோக குறை தீர்க்கும் முகாம் இன்று திருவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில் விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி கலந்துகொண்டு குறைகளை கேட்டறிய உள்ளார். திருவில்லிபுத்தூர் வட்டமின் நுகர்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Electricity Delivery Camp ,
× RELATED பணம் திருடியவர் கைது