×

உணவு பாதுகாப்புத்துறை கவனிக்குமா? ஆட்டோ தொழிலாளர்கள் கம்பத்தில் ஆர்ப்பாட்டம்

கம்பம், அக்.15: புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி கம்பத்தில் ஆட்ேடா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க ஏரியா செயலாளர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் அபுபக்கர், மனோகரன், நிஜாம் ராஜா, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு தொழிற்சங்க ஏரியா தலைவர் லெனின் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட குழு விஜயா உள்பட பலர் பேசினர்.மாவட்ட செயலாளர் மோகன் நிறைவுரையாற்றினார். ஏரியா பொருளாளர் மீரா மைதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் ஏரியாக்குழு உறுப்பினர்கள் கண்ணன், பீர்முகமது, மோகன் மற்றும் கம்பம் காந்திசிலை, பெரியகடைவீதி சர்ச் தெரு, வேலப்பர் கோயில் தெரு, கூடலூர், சுருளிப்பட்டி, பகுதிகளை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Department ,Auto workers ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன...