×

சின்னமனூரில் இடியும் அபாயத்தில் தரைப்பாலம்

சின்னமனூர், அக். 15: சின்னமனூரிலுள்ள 27வது வார்டு பகுதியில் அழகர்சாமிநகர், சிவசக்தி நகர் உள்ளது. இப்பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இரு நகருக்கும் இடையில்  பிடிஆர் கால்வாய் கடக்கிறது. இதனால்  1973ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.இந்த பாலத்தின் அருகில் நான்கு வழிப்பாதை பிரிவுகளாக எரச்சக்கநாயக்கனூர், அப்பிபட்டி, மின்நகர், ஓடைபட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லலாம். இச்சாலைகளில் தென்னை,வாழை உள்ளிட்ட பல வகையான குறுகியகால பயிர் சாகுபடி நடக்கிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் இந்த பாலத்தை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.பாலத்தில் சிறிதாக விழுந்த ஓட்டை பழுது நீக்கப்படாததால் 3 ஆண்டுகளில் பெரும் ஓட்டையாக மாறி கம்பிகள் வெளியே தெரிகிறது. கனரக வாகனம் ெசன்றால் அடுத்த நொடியே பாலம் இடியும் அபாயத்தில் உள்ளது. இதனால் உரம், பூச்சி மருந்து, அறுவடை பயிர்களையும் பாலத்தின் வழியாக கொண்டு போக முடியாமல் விவசாயிகள் பல கிலோ மீட்டர் கணக்கில் சுற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது.எனவே, சின்னமனூர் நகராட்சியும், பொதுப்பணித்துறையும்  அபாயகரமான பாலத்தை  ஆய்வு செய்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?