×

மேலூர் அருகே மழையில் இடிந்து விழுந்த வீடு மூதாட்டி தவிப்பு

மேலூர், அக். 15: மேலூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஆதரவற்ற மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்தது.மேலூர் அருகே கீழையூர் அரசு பள்ளி அருகில் வசித்து வருபவர் அல்லிமுத்து(80). இவரது கணவர் ஆறுமுகம் கடந்த 20 வருடத்திற்கு முன்பே இறந்து விட்டதால், தனியாக தனது ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மேலூர், கீழையூர், கீழவளவு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் இவரது ஓட்டு வீடு ஒரு பக்கமாக இடிந்து விழுந்தது. இதில் இவர் வீட்டிற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பொருட்கள் சேதமானது. ஆதரவற்ற இவருக்கு குடியிருக்கும் வீடும் இடிந்து போனதால் அல்லிமுத்து மிகுந்த சோகத்தில் உள்ளார்.

Tags : Muttatti ,Melur ,
× RELATED கனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்