×

பழநியில் ரூ.1.36 கோடி வங்கி கடனுதவி

பழநி, அக். 15: பழநியில் பொதுமக்களுக்கு வங்கி மூலம் ரூபாய் 1.36 கோடிக்கு கலெக்டர் விஜயலட்சுமி கடன் ஆணைகள் வழங்கினார். பழநி ரயிலடி சாலையில் உள்ள தனியார் கட்டிடத்திற்கு கனரா வங்கி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கனரா வங்கியின் மதுரை மண்டல பொதுமேலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். துணை பொது மேலாளர் மாதவராஜ், பழநி நகராட்சி ஆணையர் நாராயணன், திண்டுக்கல் மண்டல உதவி பொது மேலாளர் ஜோஸ்வி முட்டத், மண்டல மேலாளர் மோகனன் முன்னிலை வகித்தனர். பழநி கிளையின் முதன்மை மேலாளர் தர் வரவேற்று பேசினார். கலெக்டர் விஜயலட்சுமி கனரா வங்கி கிளை அலுவலகம், ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து கலெக்டர் சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகளுக்கான கிசான் திட்டம், சுயஉதவி கூட்டுக்குழு மற்றும் வீட்டுக்கடன் என வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு ரூபாய் 1.36 கோடி மதிப்பிலான கடன் ஆணைகள் வழங்கினார். பின்னர் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் 36 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது