×

வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கெடுபிடி

சேலம், அக்.15:சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு மனுகொடுக்க வரும் பொமக்களிடம் காட்டும் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து நேரடியாகவும், மனுக்களாவும் தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், மனு கொடுக்க வரும் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, மனுகொடுக்க வருபவர்களிடம் பலத்த கெடுபிடிகளை கடைபிடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு, ஆத்தூரைச் சேர்ந்த பெண்கள் சிலர், நிலம் கொடுப்பதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய அங்கிருந்த போலீசார், மனு அளிக்க உள்ளே விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அழுதுபுலம்பியபடி பெண்கள் சென்றனர். முக்கிய கோரிக்கைகள் குறித்து தெரிவிக்க ஒன்றாக வருபவர்களையும், உள்ளே விடாமல் திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, போலீசாரின் கெடுபிடிகளை தளர்த்துவதுடன், மனு அளிக்க வரும் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : public ,Ombudsman ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...