×

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

தாராபுரம், அக். 15: திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழக அரசு கடந்த ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுவதும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி கன்னிவாடி அரசு பள்ளியிலிருந்து கரூர் சாலை வழியாக கன்னிவாடி பேரூராட்சி அலுவலகம் சாலை, சந்தை பேட்டை, கோவில் வீதி வழியாக பள்ளிக்கு சென்றடைந்தது. இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கோஷமிட்டு சென்றனர். இப்பேரணியில் உதவி தலைமை ஆசிரியர் ராம சுந்தர்ராஜ், மூத்த ஆசிரியர் செல்லமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...