×

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

திருப்பூர், அக். 15:  திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆறு குறுமையங்கள் அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சதுரங்க போட்டிகள் நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கான போட்டிகள் நேற்று நடந்தன. இப்போட்டிகளிள் வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. அதில் 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டி நடந்தது. இதில்  மாணவர்கள் பிரிவி 11 வயதுக்குட்பட்ட பிரிவில் மாதவன் முதலிடம், க்ரிஷாந்த்  இரண்டாமிடம், ஸ்ரீயாஸ் மூன்றாமிடம் பிடித்தனர். 14 வயதிற்குட்பட்ட பிரிவில் கிஷோர்,  கோகுல கிருஷ்ணா, சுகன் ரித்திக் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 17 வயதுக்குட்பட்ட பிரிவில் தாணு தர்ஷன் முதலிடம், நாகதிலக் இரண்டாமிடம், சரவண சுதர்ஷன் மூன்றாமிடம். 19 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் விக்னேஷ் சிவராம், இரண்டாமிடம்  சூர்யா, மூன்றாமிடம் லோகேஷ் பிடித்தனர்.

மேலும் மாணவிகளுக்கான போட்டியில் 11 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் சுருதி, இரண்டாமிடம் ஆர்ண ப்ரதா, மூன்றாமிடம் ஆர்த்தி. 14 வயதிற்குட்பட்ட பிரிவில்  முதலிடம் ஆராதனா, இரண்டாமிடம் சந்தியா, மூன்றாமிடம் விகாசினி. 17 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் சண்முகப்பிரியா, இரண்டாமிடம் வைஷ்ணவி, மூன்றாமிடம்  விஷ்ணுப்ரியா. 19 வயதிற்குபட்ட பிரிவில் முதலிடம் லிடியா, இரண்டாமிடம் நித்யஸ்ரீ, மூன்றாமிடம் சந்தியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாநில அளவில் நடக்கும் சதுரங்க போட்டியில் பங்குபெறுவார்கள்.
இப்போட்டிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமையாசிரியை வசந்தாமணி மற்றும் முன்னாள் ஆசிரியர் புருஷோத்தமன், பசுமை ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் பாலசுப்பிரமணியம் துவங்கி வைத்தார். இந்த போட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : chess competition ,
× RELATED மாநில சதுரங்க போட்டிக்கு கோவில்பட்டி ஜோசப் பள்ளி மாணவர் தேர்வு