×

4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு

கோவை, அக்.15:   கோவை உக்கடத்தில் 4 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய 88 ேகாடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி வழங்கிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை 1.9 கி.மீ தூரத்திற்கு 215 கோடி ரூபாய்க்கு ேமம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. மேம்பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு, கர்டர்கள் மூலமாக பாலம் இணைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் கீழ் 4 வழிப்பாதையாக அணுகு ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை அரசு, தனியார் வசம் உள்ள 3.2 எக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 1.7 எக்டர் நிலம், அதாவது சுமார் 4 ஏக்கர் நிலம் தனியாருக்கு  சொந்தமானது. இந்த இடத்தில், விவசாயம், வணிக கட்டிடம் மற்றும் காலியிடமாக இருக்கிறது. இந்த இடத்தை ஆர்ஜிதம் செய்ய வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 88 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் 22 கோடி ரூபாய் என்ற வகையில் உச்சகட்டமாக இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது. கோவை நகரில் வேறு எங்கேயும் இந்த அளவிற்கு உச்சபட்ச அளவில் நில மதிப்பீடு தயாரித்து இழப்பீடு தரவில்லை. கடந்த 2010ம் ஆண்டில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மசக்காளிபாளையம், நவ இந்தியா பகுதியில் ஸ்கீம் ரோடு போட சுமார் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு 60 லட்ச ரூபாய்க்கு குறைவாகவே இழப்பீடு தரப்பட்டது.

 பீளமேடு விமான நிலைய விரிவாக்கத்திற்கு 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 133 ஏக்கர் அரசு நிலம் போக, மீதமுள்ள நில 494 ஏக்கர் தனியார் நிலத்திற்கு, அதுவும் வீடு கட்டடம் உள்ள இடத்திற்கு சதுரடிக்கு 1600 ரூபாய் என இழப்பீடு ெதாகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உக்கடம் மேம்பால பணிக்கு மட்டும் உச்சபட்ச தொகையை இழப்பீடாக நிர்ணயம் செய்த விவகாரம் நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் விசாரணையில் இருக்கிறது. நில நிர்வாக ஆணையர் அலுவலகம் இந்த தொகையை இழப்பீடாக வழங்காமல் கடந்த 3 ஆண்டாக நிலுவையில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. கோவைப்புதூர் பிரிவில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை ரிங் ரோடு அமைக்க 143 எக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இங்ேக நிலம் கையகப்படுத்த சுமார் 700 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படவுள்ளது. உக்கடத்தில் வழி காட்டி மதிப்பை காட்டிலும் பல மடங்கு தொகையை இழப்பீடாக வழங்க நிர்ணயம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நில ஆர்ஜிதம் இல்லாத நிலையில், மேம்பால பணி நடக்கிறது. நில ஆர்ஜிதம் செய்யாவிட்டால் அணுகு ரோடு அமைக்க முடியாது. தற்போது தற்காலிகமாக தனியார் இடத்தில் கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் இருக்கிறது. இழப்பீடாக நிர்ணயம் செய்த தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கினால் மட்டுமே அணுகு ரோடு அமைக்க முடியும். இழப்பீடு தொகை விவகாரம் கிடப்பில் இருப்பதால், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை அணுகு ரோடு அமைக்கும் திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...