×

சிறுவாணியில் உச்சத்தில் தொடர்கிறது நீர் மட்டம்

கோவை, அக்.15:  கடந்த ஒரு மாதமாக அணை நீர் மட்டம் உச்ச அளவில் தொடர்கிறது. கேரள நீர்பாசனத்துறையினர், அணையின் பாதுகாப்பு கருதி, முழு கொள்ளளவில் நீர் தேக்க அனுமதிக்கவில்லை. அணையில் இருந்து சில நாட்களுக்கு முன் நீர் முன் அறிவிப்பின்றி திறந்து வெளியேற்றப்பட்டது. அணையின் மொத்த நீர் தேக்க உயரத்தில் இருந்து 50 செ.மீ அளவிற்கு குறைவாக நீர் தேக்கம் இருக்கவேண்டும் என கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. அணையின் நீர் தேக்க பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் 12 மி.மீ மழை பெய்தது.

நேற்று சிறுவாணி அடிவாரத்தில் 40 மி.மீ மழை ெபய்தது. அணையில் கடந்த சில நாட்களாக நீர் மட்டம் ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கிறது.  நீர் பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவ மழை தாக்கம் இருப்பதாக தெரிகிறது. கன மழை பெய்தால் அணையின் நீர் மட்டம் குறையாது. தற்போது அணையில் உள்ள தண்ணீரை 6 மாதத்திற்கு பயன்படுத்த முடியும். கோவை சிறுவாணி அடிவாரத்தில் இருந்து அணைக்கு செல்லும் மலைப்பகுதி ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரோடு சீரமைப்பு பணி முடியாத நிலையில், குடிநீர் வாரியத்தினர் அணைப்பகுதியில் ஆய்வு செய்ய முடியாத நிலையிருக்கிறது.


Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது