×

பவுண்டரி கழிவு தொடர்பாக ஆய்வு

கோவை, அக்.15: கோவை சூலூர் வட்டாரத்தில் 3 பவுண்டரி நிறுவனங்களில் இருந்து மாசு ஏற்படுத்தும் கழிவுகளை குவிப்பதாக பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரின் நேற்று பவுண்டரி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் காஸ்டிங் கழிவுகள் வெளியேற்றப்பட்ட இடம், கழிவு மணல் குவிக்கப்பட்ட இடம் போன்றவற்றை பார்வையிட்டு அதிகாரிகள் விசாரித்தனர். கழிவு கொட்டப்பட்ட இடத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாகவும், நிலத்தில் செடி, புற்கள் வளராமல் இருப்பதாகவும் தெரியவந்தது.

பவுண்டரி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மின் வாரியத்தின் மூலமாக மின் இணைப்பை துண்டிக்கவும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மலுமிச்சம்பட்டியில் ஒரு பவுண்டரி நிறுவனத்தின் மூலமாக மாசு பாதிப்பு ஏற்பட்டது. இந்த பவுண்டரி நிறுவனம் மூடப்பட்டு சில நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்ட அளவில் பவுண்டரி நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.



Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு