×

அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் மதகு, கரைகள் சேதம்

ஈரோடு, அக்.15: கவுந்தப்பாடி அருகே சிங்காநல்லுார் காட்டுவலசு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியதாவது: பெருந்துறை தாலுகா, பாண்டியம்பாளையம் கிராமத்தில் கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் உள்ளன. அங்கிருந்து அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள், கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரமாக செல்கின்றன. இதனால், வாய்க்கால் கரைகளும், மதகுகளும் சேதமடைகிறது. மேலும், வெடி பொருட்கள் மூலம் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், அதிக சத்தம், அதிர்வால் மக்களும், கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, புதுக்குமாரபாளையம், குஞ்சரமடை, சந்தியாபுரம், பிரப் நகர், நத்தக்காட்டுவலசு, பாறைக்காட்டுவலசு, கருக்கம்பாளையம், காட்டுவலசு, வாய்க்கால்புதூர் பகுதியில் உள்ள மக்களும், கால்நடைகளும் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, அங்குள்ள குவாரிகளை ஆய்வு செய்து, கல் எடுக்கும் பணியை நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : shore ,
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு