×

தினமும் மழை பெய்வதால் தீபாவளி விற்பனை களைகட்டுமா?

ஊட்டி, அக். 15:நீலகிரியில் நாள் தோறும் கன மழை பெய்து வரும் நிலையில் தீபாவளி வியாபாரம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இடைப்பட்ட காலங்களில் மழை குறைந்து காணப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறித்த சமயத்தில் பெய்வதில்லை. அதுமட்டுமின்றி, காலம் தவறி பெய்வது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற காலம் தவறி பெய்யும் போது, பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, கன மழை பெய்யும் சமயங்களில் சாைலேயாரங்களில் மண் சரிவு, நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரியில் பருவ மழை பொய்த்த நிலையில் இம்முறையும் ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை போக்கு காட்டியது. ஆனாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால் நீர் நீலைகளில் தண்ணீர் அதிகரித்தது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அனைத்து அணைகளிலும் தண்ணீர் முழு கொள்ளலவை எட்டியது. அனைத்து ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் அதிகளவு காணப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளனர்.

அதேபோல் மார்க்கெட் போன்ற பகுதிகளில் சிறிய கடைகளிலும் வியாபாரிகள் அதிகளவு ஆடைகளை வாங்கி குவித்துள்ளனர். பண்டிகை நெருங்கிய நிலையில், பொதுமக்களும் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க தற்போது ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மாதத்தின் முதல் வாரம் என்பதாலும், சில தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் போனஸ் வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் புதிய பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்வதால் வியாபாரம் பாதிக்கிறது. குறிப்பாக, சாலைேயாரங்களில் ஆடைகள் மட்டுமின்றி பல்வேறு பொருட்களையும்  விற்பனைக்கு வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : rain everyday ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி