×

கேஎம்சிஎச் மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் உடல் பரிசோதனை

ஈரோடு, அக்.15: கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிறப்பு சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை முகாம் நடக்கிறது. இந்த முகாமில் எக்ஸிக்யூடிவ் முழு உடல் பரிசோதனை திட்டத்தில் 25 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இதை வரும் 31ம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள தொகுப்பு ரூ.3 ஆயிரத்தில் அளிக்கப்படும். இந்த தொகுப்பில் இதய பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது.முகாமில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் காலை 7 மணி முதல் 8 மணி வரை மருத்துவமனைக்கு வெறும் வயிற்றில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98949 50440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : KMCH Hospital ,
× RELATED கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லுாரி...