×

தென்காசியில் பேரிடர் தடுப்பு தின பேரணி

தென்காசி, அக். 15: தென்காசியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் உலக பேரிடர் தடுப்பு தின பேரணி மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை பாதுகாப்பாக அணைப்பது குறித்த தீயணைப்புத்துறையின் செயல்விளக்க முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமை வகித்தார். தாசில்தார் சண்முகம், ரெட்கிராஸ் சேர்மன் கருப்பையா, துணை தலைவர் சந்திரசேகரன், சிவகிரி செயலாளர் மனோகர், பேரிடர் துணைக்குழு சேர்மன் மாஸ் முகம்மது அன்சாரி, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி இளம்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பார்வதி, ஈஸ்வரி, ராம் நல்லமணி யாதவா கல்லூரி திட்ட அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பு துவங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான வீரர்கள் விபத்து மற்றும் மாடி வீடுகளில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு மீட்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ரெட்கிராஸ் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : Disaster Prevention Day Rally ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து