அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது

உளுந்தூர்பேட்டை,  அக். 15:  உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை  ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  ரோட்டரி சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்  செந்தில்குமரன் வரவேற்றார், சங்கத்தின் மாவட்ட துணை ஆளுநர் காங்கேயன்,  மாவட்ட லிட்ரசி பொருப்பாளர் புதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வரலாறு பட்டதாரி ஆசிரியர்  பாண்டியனுக்கு தொடர்ந்து 6 ஆண்டுகளாக பொதுத்தேர்வில் வரலாறு பாடத்தில்  நூறு சதவிகிதம் தேர்ச்சி வழங்கியதற்காக மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனர்  கண்ணப்பன் சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உளுந்தூர்பேட்டை மாவட்ட  கல்வி அலுவலர் ரவி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் அன்பழகன், வின்சென்ட்,  மோகன்ராஜ், முத்துராமன், முத்துகுமாரசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: