முதல்வரின் பலவீனத்தை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது வீண் புகார்

புதுச்சேரி, அக். 15:    புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து  ரெயின்போ நகரில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: ஏனாமுக்கு சென்றுள்ள துணை நிலை ஆளுனருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஆளும் காங்கிரஸ் அரசு உருவாக்கியுள்ளது. புதுச்சேரி ஆளுனரின் பாதுகாப்புக்காக ஏனாமுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து காவல்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுபோன்ற சூழ்நிலை இருப்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 90 சதவீத கோப்புகளை துணை நிலை ஆளுனருக்கு அனுப்புவதில்லை என்று சட்டசபையிலேயே முதல்வர் கூறியுள்ளார். தற்போது துணைநிலை ஆளுனர் தடுப்பதாக ஏன் பொய் கூறுகிறார். இது முதல்வரின் பலகீனத்தை காட்டுகிறது.  குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை கல்வீடுகளாக ரங்கசாமி மாற்றினார். முதியோர், விதவை பென்ஷன் நிதியுதவியை ரூ.1500, ரூ.2000, ரூ.3000 என உயர்த்தினார்.  காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 100 யூனிட் மின்சாரம், இலவச செட் ஆப் பாக்ஸ், அரசு கேபிள் டிவி கொண்டு வரப்படும் என்றார். ஆனால் இதுவரை அதனை செய்யவில்லை. செட்டாப் பாக்சின் ஒட்டுமொத்த ஏஜென்டாக ஜான்குமாரை நியமித்தவர்தான் நாராயணசாமி. தனது பலகீனமான செயலை  மூடி மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது  குற்றம் சுமத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார் நாராயணசாமி. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா வெற்றி பெற்றால் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார் என்றார்.

Advertising
Advertising

Related Stories: