×

சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 கலச அபிஷேகம்

சீர்காழி, அக்.15: நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகவும், நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்கு உரிய தலமாகவும் விளங்கி வருகிறது. மேலும் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகம், இக்கோயிலில் அகோரமுர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் நேற்று 1008 கலச அபிஷேகம் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாக பூஜையும், பின்னர் மகா பூர்ணாகுதியும், மகாதீபாரதனையும் நடந்தது. பின்னர் 1008 கலசங்களில் இருந்த புனிதநீர் அடங்கிய யாக குடங்கள் மற்றும் கலசங்களை கொண்டு பட்டு, சுவேதாரண்யேஸ்வரருக்கு ஆலய அர்ச்சகர் ராஜாப்பாசிவாச்சாரியர் முன்னிலையில் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காட்டபட்டது. இதில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம், சிவானந்தம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : abhishekam ,Sirkazhi ,temple ,
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்