×

சேத்தியாத்தோப்பு அருகே நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் சீரமைப்பு

சேத்தியாத்தோப்பு, அக். 15: சேத்தியாத்தோப்பு அருகே நல்லதண்ணீர்குளம் கிராமத்தில் பழுதான மின் மோட்டாரை சரி செய்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரேற்றி குடிநீர் வழங்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எரும்பூர் ஊராட்சி நல்லதண்ணீர்குளம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதானது. இதனால் அப்பகுதி கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிராம மக்கள் விரைந்து வந்து மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்ராஜியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன்படி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று மின் மோட்டாரை சரி செய்து மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினர்.

காவல் நிலையத்தில் தூய்மை பணி பண்ருட்டி, அக். 15: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தினந்தோறும் டெங்கு காய்ச்சலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சரியாக செயல்படாத பணியாளர்களுக்கு அபராதமும் விதித்தார். இதன் விளைவாக அண்ணாகிராமம், தொரப்பாடி, பண்ருட்டியில் தூய்மை பணிகள் நடந்தன. பண்ருட்டி நகராட்சி சார்பில் துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையில் 100 பேர் துப்புரவு பணியாளர்களை கொண்டு அதிரடியாக நேற்று கெடிலம் ஆற்றில் உள்ள டோபிகானா, பண்ருட்டி காவல்நிலையம் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றினர். மேலும் பழைய டயர்கள், வீணான பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். பின்னர் டோபிகானாவில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை  போடாமல் பார்த்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர். அப்போது சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமி, தின்னாயிரமூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Tags : Sathyathope ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது