×

குப்பநத்தம் கிராமத்தில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம், அக். 15: விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆதி, எழில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் ஏஎஸ்பி தீபாசத்தியன் தலைமை தாங்கி முகாமில் பேசியதாவது: விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்கொலை சம்பவங்களுக்கு காரணம் எதுவாக இருப்பினும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, தற்கொலை தடுப்பு பிரிவு என்ற புதிய பிரிவினை விருத்தாசலம் காவல் உட்கோட்டத்தில் தொடங்கி இருக்கின்றோம்.

தற்கொலை தடுப்பு பிரிவானது மனநலம் சார்ந்த மருத்துவர்கள் யோகா கலை நிபுணர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவாக செயல்படுகிறது. பொதுமக்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை தடுப்பு பிரிவு 9488910728 என்ற செல்போன் எண் மூலம் பேசியும் மிஸ்டுகால் விடுத்தும் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவித்தும் தொடர்பு கொண்டு தங்களின் குறைகளை கூறலாம். அதற்கேற்றார் போல் அவர்கள் மேற்கண்ட செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்பு மற்றும் தகவல் பெறப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். முன்னதாக விருத்தாசலம் பாலக்கரையில் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தங்களது புகார்களை தெரிவிக்கும் வண்ணம் புகார் பெட்டி அமைக்கப்பட்டு அதனை திறந்து வைத்தார். அதில் பொதுமக்கள் எந்த விதமான குறைகளாக இருந்தாலும் புகார் எழுதி பெட்டியில் போடலாம். அதனை ஏஎஸ்பி நேரடி பார்வையில் விசாரிக்கப்பட்டு அதற்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இதில் விருத்தாசலம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட காவலர்கள் மற்றும் குப்பநத்தம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Suicide prevention awareness camp ,village ,Kuppanam ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...