×

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், அக்.15 : குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை நாகர்கோவிலில் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நேற்று (14ம் தேதி) தொடங்கியது. நவம்பர் 3ம் தேதி வரை 21 நாட்கள் இப்பணி நடக்கிறது. இதில், 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் கலப்பின கால்நடைகளில் இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடைகளை தாக்குகிறது. இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் தாக்குதலினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினைபிடிப்பது குறைகிறது. இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது.

இந்நோயிலிருந்து முற்றிலுமாக கால்நடைகளை பாதுகாப்பதற்கு கால்நடை பராமரிப்பு துறையால் தடுப்பூசி போடப்படுகிறது. இப்பணியை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் நடராஜகுமார், நாகர்கோவில் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் நோபிள், தக்கலை கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் ரிச்சர்டுராஜ் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,district ,Kumari ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...