×

சீரமைக்க கோரிக்கை நீடாமங்கலத்தில் இருந்து சேலத்திற்கு 1250 டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,அக்..15: நீடாமங்கலத்தில் இருந்து சேலத்திற்கு 1250 டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்,மன்னார்குடி பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்களை அரசு நெரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து அங்கிருந்து பல்வேறு திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் அரவை செய்த அரிசிகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும்.
பின்னர் அங்கிருந்து ரயில் பெட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காகவும்,அரிசி மூட்டைகள் பொது வினியோக திட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி மற்றும் வட்ட கிடங்கு மன்னார்குடியிலிருந்து 100 லாரிகளில் 1,250 டன் பொது ரக அரிசிமூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து தொழிலாளர்கள் 21 ரயில் வேகன்களில் ஏற்றி சேலம் மண்டலத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Salem ,Needamangalam ,
× RELATED அந்நிய பொருட்களை விற்க கூடாது: த.வெள்ளையன் வேண்டுகோள்