×

வேளாண் அதிகாரி வேண்டுகோள் நீடாமங்கலம் அருகே ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நீடாமங்கலம்,அக்.15: நீடாமங்கலம் அருகில் தஞ்சை சாலை கொண்டியாற்று பாலத்திலிருந்து காளாச்சேரி இணைப்பு சாலை வரை சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து இரு சக்கர வாகனங்கள் போக முடியாத நிலையில் சாலை உள்ளது. இது குறித்து என தினகரனில் 2 முறை செய்திகள் படத்துடன் வெளியானது.இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன் அந்த சாலை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கி கடந்த மூன்று மாதத்திற்கு முன் சாலையில் சிகப்பு மண் கொட்டப்பட்டு தார் போடும் நிலையில் சாலை தயாராக இருந்தது.இந்நிலையில் 3மாதங்களாக சாலை அமைக்குப் பணி தாமதமாக உள்ளதால் அவை புழுதி பறந்து தற்போது பழைய சாலை போன்று கப்பிகள் பெயர்ந்து சாலை மோசமாக உள்ளது.இந்த சாலை மிகவும் முக்கியமான சாலை என்பதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பள்ளி,கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர்.சாலையில் தற்போது போடப்பட்ட புதிய கப்பிகள் புரண்டு பழைய சாலை போல் உள்ளது எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நேரில் சென்று பார்வையிட்டும் உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,motorists ,agriculture officer ,Needamangalam ,
× RELATED தங்கவயலில் ஒட்டு போட்ட சாலையை அடித்து சென்ற கனமழை: வாகன ஓட்டிகள் அவதி