மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரசார இயக்கம்

திருத்துறைப்பூண்டி, அக்.15:
திருத்துறைப்பூண்டி அருகே பாமணி உள்ளிட்டஒன்றியபகுதிகளில் மத்தியஅரசின் மக்கள்விரோத போக்கை கண்டித்தும் , பல்வேறு கோரிக்கைகளை ‘ வலியுறுத்தி இந்தியகம்யூனிஸ்டகட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சிகள் சார்பில் பிரசாரஇயக்கம் நடந்தது. முன்னாள்எம்எல்ஏஉலகநாதன் தலைமை வகித்தார். இதில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சிஒன்றிய செயலாளர் பாஸ்கர், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஒன்றிய செயலாளர்கள்காரல் மார்க்ஸ், கதிரேசன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட துணை செயலாளர் ஞானமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடியை பொதுத்துறை முதலீட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு தளவாட உற்பத்தி, நிலக்கரி ஆகிய துறைகளில் 100 சதவீதம் அந்நிய முதலீடு என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாவட்டநிர்வாக குழு சந்திரராமன், நகர செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Party ,government ,
× RELATED வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் குடி...