×

சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து ெகாள்ளுங்கள் வேளாண் அதிகாரி வேண்டுகோள்

திருவாரூர், அக்.15: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பீடு செய்து கொள்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.

கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி டிசம்பர் மாதம் 15ம்தேதி என்ற நிலையில் அதுவரையில் காத்திருக்காமல் தங்களது பயிர்களை உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதன்படி காப்பீடு தொகை என்பது ஏக்கருக்கு ரூ465 ஆகும். மேலும் விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்பட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ,ஆதார் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து கட்டண தொகை ரசீதுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Agricultural Officer ,Taladi ,Samba ,
× RELATED தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி...