நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

அண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (56). இவரது மகன் வடிவேல் (25). லாரி டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று  முன்தினம் மாலை செங்குன்றத்தில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக் கொண்டு மதுரவாயல் வழியாக  சென்று கொண்டிருந்தனர். லாரி டிரைவர் துரை உட்பட 3 பேர் முன்பக்கம் அமர்ந்து சென்றனர். மேலும், செங்கல் மீது ஒருவர் அமர்ந்து சென்றார். திருமங்கலம் 100 அடி சாலை வழியாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின்  முன்பக்க டயர் வெடித்ததால், சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்தது. இதனால், டிரைவர் உள்பட லாரியில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

Advertising
Advertising

தகவலறிந்து வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கிரேன் மூலம் லாரியை அகற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து  விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: