புழல் 23வது வார்டில் மின் பெட்டி அருகே குடிநீர் குழாய்: பொதுமக்கள் அச்சம்

புழல்: புழல் விநாயகர் கோயில் தெருவில் மின் பெட்டி அருகில் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் விநாயகர் கோயில்  தெருவில் குடிநீர் கை பம்பு மற்றும் பொது குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இந்த குழாயில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் பம்பு மற்றும் குழாய் இடையே மின் பெட்டி உள்ளதால், பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும்  போது மின் கசிவு ஏற்படும் நிலை உள்ளது. இதனால், மக்கள் அச்சத்துடன் குடிநீர் பிடித்து வருகின்றனர். எனவே, இந்த மின் பெட்டியை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முறையிட்டும்,  இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின் பெட்டியை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: