மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், லட்சுமண முதலியார் தெருவை சேர்ந்தவர் வள்ளி (49). இவரது கணவர் அண்ணாமலை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து வள்ளி, தேவராஜன் (71) என்பவரை சில  ஆண்டுகளுக்கு முன்பு  2வது திருமணம் செய்து கொண்டார். வள்ளி நடத்தை மீது தேவராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 6ம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வள்ளி, வீட்டில் இருந்த  மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தேவராஜன் வள்ளியை காப்பாற்ற முயன்றார். இதில்  படுகாயமடைந்த வள்ளி இறந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த  தேவராஜன் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார்.

Advertising
Advertising

Related Stories: